×

தினமும் மாலையில் படியுங்கள் உலக உடற்பயிற்சி தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி: உலக உடற்பயிற்சி தினத்தை முன்னிட்டு உடற்பயிற்சியின் அவசியம் குறி த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மன்னார்குடி தனியார் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலமாக பேரணியாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சிவக்குமார் கூறுகையில், தினசரி 30 முதல் 15 நிமிடங்கள் நாம் உடற் பயிற்சி செய்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்வுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.மன நோய் ஏற்படுவதை தடுக் கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகரித்து கவலைகள் குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டில் இருக்கும். உயர் ரத்த அழுத்தம் வருவதை தடுக்கும். தினசரி உடற்பயிற்சியின் நன்மைகள், மாரடைப்பு, நீரிழிவு நோய், பெருங் குடல், மார்பகம், கருப்பை மற்றும் நுரையீரல் போன்ற சில வகையான புற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. நாள்பட்ட சோர்வு உள்ளவர்களுக்கு தினசரி உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

The post தினமும் மாலையில் படியுங்கள் உலக உடற்பயிற்சி தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Every Evening Skating Awareness Rally ,World Fitness Day ,Mannargudi ,Mannargudi Private School ,Sivakumar ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...